Thursday, November 04, 2010

ஓரு துளி இரத்தம் - 2

மிஷனர் அலுவலகம்.. கமிஷனர் ராஜகோபால்..

“என்ன மிஸ்டர் விக்ரம்.. அந்த பாடியோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் என்ன சொல்லுது?”

“சார்.. Cause of death வந்து கழுத்து எலும்பு முறிஞ்சிருக்கு. Approximate’ஆ 36 hours’க்கு முன்னாடி கொலை நடந்திருக்கணும். அந்த பாடியோட நெத்தியில் இருந்த ரத்தமும், அந்த பேப்பரில் இருந்த ரத்தமும் B Positive. இறந்தவரோட ரத்தம் O Positive"

"இறந்தவரைப் பத்தி எதாவது details தெரிஞ்சுதா?”

“இல்லை சார்.. பாடியோட shirt பாக்கெட்’ல இருந்த லெட்டரைத் தவிர வேற எந்தப் பொருளும் இல்லை.
சென்னையில் உள்ள எல்லா ஸ்டேஷனுக்கும் ஃபோட்டோ அனுப்பியிருக்கேன். Person missing complaints, Criminal records எல்லாத்துலயும் search பண்ண சொல்லிருக்கேன்”

“அப்படியே நியூஸ் பேப்பர்லயும் ஒரு Ad கொடுத்துடுங்க”

“ஓகே சார்”

விக்ரமின் செல்ஃபோன் அலறியது.

“சார், நான் பெசன்ட் நகர் இன்ஸ்பெக்டர் ரவி பேசறேன்”

“சொல்லுங்க ரவி”

“சார், இங்க பெசன்ட் நகர் பீச்ல ஒரு பாடி கிடக்கு. Last week மெரினா’ல கிடைச்ச பாடி மாதிரியே நெத்தியில ஒரு துளி ரத்தம் உறைஞ்சிருக்கு”

“சரி, நான் இப்போ உடனே ஸ்பாட்டுக்கு வர்றேன்” என்று சொல்லியபடி செல்ஃபோனை அணைத்தான் விக்ரம்.

“என்ன விக்ரம், என்னாச்சு?”

“சார்.. பெசன்ட் நகர் பீச்ல அதே மாதிரி ஒரு பாடி கிடக்காம்.. இன்ஸ்பெக்டர் பேசினார்”

“ஓ.. எவனோ ஒரு பைத்தியக்காரன் நம்மளைத் தூங்கவிடக் கூடாதுன்னு கிளம்பியிருக்கான்னு நினைக்கிறேன். Last week murder ஆன அந்த ஆளோட ஃபோட்டோவைத் தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஸ்டேஷனுக்கும் அனுப்பச் சொல்லுங்க. சரி, நீங்க உடனே ஸ்பாட்டுக்கு கிளம்புங்க”

==============================================================

பெசன்ட் நகர் பீச்..

“ரவி, பாடியோட shirt / pant பாக்கெட்ல எதாவது இருந்துதா?”

“அப்படி எதுவும் இல்லை சார். ஆனா, கையில் ஒரு வாட்ச் மட்டும் கட்டியிருக்கு. அதுவும் ஓடலை”

“வாட்ச்’ல என்ன டைம் இருக்கு?”

“ரெண்டு மணி சார்”

விக்ரமின் செல்ஃபோன் அலறியது.

“சார், கண்ட்ரோல் ரூம்லருந்து பேசுறோம்.. ஓல்ட் மகாபலிபுரம் ரோட்ல இருக்குற Blue Heaven பீச் ரிசார்ட்ல ஒரு மர்டர். போன வாரம் மெரினால நடந்த மர்டர் மாதிரியே அந்த பாடியிலயும் நெத்தியில ஒரு துளி ரத்தம் இருக்குறதா தகவல் வந்திருக்கு சார்”

“ஓகே, நான் ஸ்பாட்டுக்குப் போறேன், அந்த ஏரியா இன்ஸ்பெக்டரை என்னை contact பண்ணச் சொல்லுங்க”

“சரி சார்.. சொல்லிடறேன்”

ஃபோனை அணைத்தபடியே,

“ரவி, same mode’ல இன்னொரு மர்டர்”

“எங்க சார்?”

“Blue Heaven பீச் ரிசார்ட், ஓல்ட் மகாபலிபுரம் ரோட்.. சரி, நீங்க பாடியை போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பிட்டு, ரிப்போர்ட் வந்ததும் என்னை contact பண்ணுங்க”

“ஓகே சார்”

விக்ரம் Blue Heaven ரிசார்டிற்கு வண்டியைச் செலுத்தினான். திரும்பவும் செல்ஃபோன் கூப்பிட்டது.

“சார், நான் இன்ஸ்பெக்டர் மாணிக்கவேல். Blue Heaven ரிசார்ட்லருந்து பேசறேன்”

“சொல்லுங்க மாணிக்கவேல், scene of crime என்னது?”

“சார்.. இறந்தவர் பேர் பிரவீன். பெங்களூரில் இருந்து வந்து இந்த ரிசார்ட்டில் ரெண்டு நாளா தங்கியிருக்காரு. எப்போ பீச்சுக்குப் போனாருன்னு தெரியல. காலையில ரிசார்ட்ல தங்கியிருந்தவங்க சில பேர் பீச்சுக்குப் போறப்ப பாடியைப் பார்த்து ரிசார்ட்ல இன்ஃபார்ம் பண்ணிருக்காங்க. பாடியில் எங்கயும் காயம் எதுவுமில்ல. நெத்தியில் மட்டும் ஒரு drop ரத்தம் உறைஞ்சிருக்கு”

“Shirt, pant பாக்கெட்ல எதுவுமில்லையா?”

“இல்ல சார்”

“எதாவது ornaments?"

"வாட்ச் மட்டும் கட்டிருக்காரு. அதுவும் ஓடலை”

“அந்த வாட்ச்ல என்ன டைம் காட்டுது?”





...தொடரும்


[Note: Thanks to my wife, for helping me in typing these Tamil fonts and for immediate feedbacks and corrections]