Showing posts with label மினி தொடர்கதை - நீ வருவாய் என. Show all posts
Showing posts with label மினி தொடர்கதை - நீ வருவாய் என. Show all posts

Sunday, June 17, 2007

நீ வருவாய் என - V

பகுதி I
பகுதி II பகுதி III பகுதி IV

இரவின் தூக்கமின்மை ரவியின் கண்களில் தெரிந்தது. வீட்டின் கதவை திறப்பதற்க்கும், சுஜி உள்ளே வருவதற்க்கும் சரியாக இருந்தது.சுஜியை அவன் இப்போது இங்கு எதிர் பார்க்கவில்லை. அவள் முகத்தைப் பார்க்க கூட அவனால் முடியவில்லை. ரவி ஏன் அப்படி செய்தான் என்று அவளுக்கும் புரியவில்லை. அவனாக பேசட்டும் என்று அவள் அமைதியாக இருந்தாள். இருவரின் மௌனத்தால், அங்கு ஒரு கனத்த அமைதி நிலவியது. நல்ல நட்புகளுக்கும், காதல்களுக்கும் இடையே உள்ள மௌனம் அழகாக இருக்கும். ஆனால் அங்கு நிலவிய மௌனத்தை இருவராலும் ரசிக்க முடியவில்லை சுஜியே மௌனத்தைக் கலைத்தாள்

சுஜி: என்னாச்சு ரவி ? ஏன் திடீர்னு கிளம்பி வந்துட்ட ? உனக்கு ரமேஷ பிடிக்கலையா ? இல்ல நான் love பண்றது பிடிக்கலையா ? ஏதாவது பேசு ரவி. இப்படியே பேசாம இருக்கிறதுனால எந்த பிரயோஜனமும் இல்ல.
[அவள் முகத்தைப் பார்க்காமல், திரும்பி நின்றபடியே பேச ஆரம்பித்தான்]
ரவி: என்னால இப்ப எதுவும் பேச முடியாது
சுஜி: உன்னைய பாத்தாலே தெரியுது, ராத்திரி எல்லாம் தூங்கலைன்னு. என்ன பிரச்னை உனக்கு? ஒண்ணும் இல்லன்னு மட்டும் சொல்லாத.
ரவி: எனக்கு நிஜமாவே தெரியல சுஜி, எப்ப இருந்து எனக்கு உன்மேல...[வார்த்தைகள் தொண்டைக்குள் இருந்து வெளிவர மறுத்தன] நான் இது வரைக்கும் அப்படி எல்லாம் நினைச்தசதே இல்ல. ஆனா நேத்து நீ கோவில்ல சொன்னவுடனே, எனக்கு என்ன சொல்லணு தெரியல.
சுஜி: நான் உன்னைய அப்படி நினைக்கலையே ரவி. கடைசி வரைக்கும் எனக்கு ஒரு நல்ல frienda தான் இருக்கணும்னு நினைச்சேன். என்னால உன்னைய அப்படி நினைக்க முடியல ரவி. எனக்கு உன் மேல அப்படி ஒரு நினைப்பே வந்தது இல்ல. எங்க அம்மா, அப்பா மாதிரி தான் ரவி நீயும் எனக்கு. கடைசி வரைக்கும் ஒரு நல்ல நண்பனா மட்டுமே தான் என்னால உன்னைய பாக்க முடியும். என்னால உன்னைய வேற எந்த உறவோடையும் கற்பனை கூட பண்ணி பாக்க முடியல. நீ என் காதலன் சொல்றத விட நீ என் நண்பன் சொல்றதுல தான் எனக்கு சந்தோஷமா இருக்கு. இதை எல்லாம் மறந்துட்டு, திரும்ப பழைய மாதிரியே ஒரு நல்ல frienda இரு ரவி, ப்ளீஸ்.
ரவி: எல்லாத்தையும் மறக்கணும்னு தான் நினைக்கிறேன், என்னால முடியல சுஜி. மனசுக்குள்ள இப்படி ஒரு என்ணத்தை வச்சுக்கிட்டு உன்கிட்ட ஒரு நல்ல frienda பழக முடியும்னு எனக்கு தோணலை
சுஜி: இப்படி எல்லாம் பேசாத ரவி. எனக்கு கஷ்டமா இருக்கு. உன்னால முடியும் ரவி. நாம பழைய மாதிரியே இருக்கலாம்.
ரவி: இல்ல சுஜி. என்னால, உன் முன்னாடி நடிக்க முடியாது.நான் உன்கூட இருக்குற வரைக்கும் உனக்கும் கஷ்டம்,எனக்கும் கஷ்டம்.
சுஜி: எனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்ல. நீ இப்படி பேசுறது தான் கஷ்டமா இருக்கு. நான் எப்பவும் மாதிரி தான் ரவி இருப்பேன். என்னால உனக்கு ஒரு கஷ்டமும் வராது.
ரவி: உனக்கு ஒரு நல்ல frienda மட்டும் இருக்க முடியும்னு எனக்கு தோணலை சுஜி. இனிமேல் என்னைய பாக்க வராத என்னால முன்னாடி மாதிரி உன்கூட பேசவோ பழாகவோ முடியாது.
சுஜி: நான் என்ன ரவி தப்பு பண்ணினேன் ? எனக்கு ஏன் தண்டனை கொடுக்குற. நீ இப்ப நல்ல மூட்ல இல்ல, கொஞ்ச நேரம் கழிச்சு யோசிச்சு பாரு. நம்ம friendship வேண்டாம்ன்ணு மட்டும் சொல்லிடாத.
ரவி: நான் யோசிச்சிட்டுத் தான் சொல்லிறேன். இது ரெண்டு பேருக்கும் கஷ்டம். வேண்டாம்.
[சுஜி எவ்வளவோ முயற்சித்தும், ரவியின் மனத்தை அவளால் மாற்ற முடியவில்லை அன்றிலிருந்து அவன் அவளின் தொடர்பை முற்றிலுமாக துண்டித்து விட்டான் இன்று இருவரும் ஒரே அலுவலகத்திலும் முற்றிலுமாக தவிர்த்து வருகிறான். சுஜியின் நினைவுகள் கலைகின்றன..மறு நாள் ]
ஷீலா: சுஜி, ரவி resign பண்ணிட்டானம். ஏன்னு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறான் ? எங்க போறன்ணு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறான் ?
சுஜி: ஓ..அப்படியா ??
[ரவி அவளிடம் இறுதி வரை பேசவில்லை. ரவி அந்த அலுவலகத்தை விட்டுச்சென்ற மறுநாள், சுஜிக்கு அவனிடமிருந்து வந்த மின்னஞ்சல்]

சுஜி,
உன்னைய hurt பண்ணினதுக்கு மன்னிச்சுடு. என்னால உன்னைய மறக்க முடியல. என்னைய விரும்புன்னு உன்னைய எப்படி நான் கட்டாயப்படுத்த முடியாதோ, அதே மாதிரி தான் என்னாலயையும் என் மனச கட்டாயப்படுத்த முடியல உன்னைய மறக்குறதுக்கு. நாம பக்கத்துல இருக்குற வரைக்கும், இது மாறப்போறது இல்ல. அதான் கொஞ்சம் விலகி போறேன்.

அன்புடன்,
ரவி.

முற்றும்.

Thursday, June 14, 2007

நீ வருவாய் என - IV



பகுதி I பகுதி II பகுதி III

சுஜி: ரவி, என்ன பண்ணுற ?
ரவி: ஆபீசில என்ன ஆடு, மாடா மேய்ப்பாங்க ? வேலை பாத்துக்கிட்டு இருக்கேன்.
சுஜி: சரி பாத்த வரைக்கும் போதும், உங்க ஆபீஸ் Reception-க்கு வா.
ரவி: யேய், இங்கயா இருக்க ? இரு வர்றேன்.
[ஆபீசிற்கு வெளியே இருவரும் சந்திக்கின்றனர்]
ரவி: இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க ?
சுஜி: உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டா?
ரவி: என்ன ?
சுஜி: நேத்து உங்க ஆபீசில இருந்து எனக்கு Interview call வந்தது உனக்கு surprise-அ இருக்கட்டுமேன்ணு தான் உன்கிட்ட சொல்லாம வந்தேன்.
ரவி: எப்ப forward பண்ணின ? இன்னைக்கா Interview?
சுஜி: ஏதோ ஒரு job site-ல இருந்து என்னோட Resume எடுத்துருப்பாங்க போல..Interview இப்பத்தான் முடிஞ்சது,நல்லா பண்ணிருக்கேன்.
ரவி: ஓ..குட் கலக்குற..
சுஜி: சரி இன்னைக்கி ஈவினிங் ராகிகுடா கோவில்க்கு வா, உன்கிட்ட முக்கியமான விஷயம் ஒண்ணு சொல்லணும். சரியா ?? நான் இப்ப கிளம்பறேன், bye.
ரவி: சரி வா, உன்னைய drop பண்ணிட்டு நான் ஆபிஸ்க்கு வர்றேன்.
[மாலை ரவி கோவிலுக்குள் நுழைகிறான்..சுஜி அவனை நோக்கி வருகிறாள்.]
சுஜி: ஏண்டா முக்கியமான விஷயம்ன்னு சொன்னேன்ல, இவ்வளவு லேட்டா வர்ற ?
ரவி: haloo madam, ஈவினிங் Bangalore trafficல வண்டி ஒட்டி பாக்கணும், சும்மா இங்க உக்காந்துகிட்டு பேச கூடாது.
சுஜி: சரி சண்டைய ஆரம்பிக்காத, வா என்னோட..
சுஜி: ரவி, இது ரமேஷ், என்னோட ஆபீசில வொர்க் பண்றாரு..
ரமேஷ்: ஹாய் ரவி
ரவி: ஹாய் ரமேஷ்
[அப்பொழுது ரமேஷின் அலை பேசி, அழைக்கிறது, ரமேஷ் சற்று தள்ளி சென்றவுடன்]
சுஜி: ரவி, ஆள் எப்படி ?
ரவி: ம்ம்...நல்ல இருக்காரு..ஏன் ?
சுஜி: உன்கிட்ட முன்னாடியே சொல்லலைன்னு கோபப்படாத. முதல்ல friend-அ தான் பழகினோம், அப்றம் அவர் சொன்னாரு, நான் கொஞ்ச நாள் யோசிச்சேன், அப்றம் இன்னைக்கி காலைல சரின்னு சொல்லிட்டேன்..முதல்ல உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு, அதான் உன்னைய வர சொன்னேன்.

ரவி இதை எதிர் பார்க்கவில்லை. உடம்பில் ஒரு உறுப்பை இழந்தது போன்ற ஒரு வலி அவன் மனதில். காரணம் புரியவில்லை, கண்கள் கலங்கின, கால்கள் நடுங்கின. ஒன்றுமே தோன்றாமல் திரும்பி நடந்தான். சுஜி கூப்பிட்டதையும் பொருட்படுத்தாமல் திரும்பிச் சென்றான். எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்பது இன்னும் ஆச்சரியம் தான். அலைபேசியை அணைத்து வைத்தான். கண்களை மூடினால், கண்ணீர் கசிந்தது. அவளை இன்று மாலை வரை தோழியாக தானே நினைத்தேன், எனக்குள் ஏன் இந்த சோகம், வலி கண்ணீர் எல்லாம். என்னையும் அறியாமல் என் மனத்தை அவள் எப்படி ஈர்த்தாள்.
அரனுக்காக இல்லாமல் அவளுக்காக அந்த ராத்திரியை சிவராத்திரி ஆக்கினான். தினமும் இனிமையாக விடியும் அந்த காலை பொழுது, அன்று அவனுக்கு கசப்பாக தோன்றியது. இரவின் தூக்கமின்மை கண்களில் தெரிந்தது, வீட்டின் கதவை திறப்பதற்க்கும், சுஜி உள்ளே வருவதற்க்கும் சரியாக இருந்தது.

தொடரும் ...
பகுதி V

Sunday, June 03, 2007

நீ வருவாய் என - III

பகுதி I
பகுதி II
முதன் முதலில் ரவியை அவள் சந்தித்த அந்த நினைவுகள்...
ஒரு அழகிய குளுமையான காலைப் பொழுது, சுஜி மிகவும் சந்தோஷமாக இருந்தாள். இன்று ஒரு MNCயில், அவளுக்கு இறுதிச் சுற்று, ஏற்கனவே 5 தகுதிச் சுற்றுகள் முடிந்து விட்டன. ஐந்திலும் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றவர்கள் வெகு சிலர் தான். எப்படியும் தனக்கு அந்த வேலை கிடைத்துவிடும் என்று மிகவும் நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் நேர்முகத்திற்க்கு சென்றாள். வந்திருந்த அனைவருமே ஒருவரை ஒருவர், ஏதோ ஒரு தகுதி சுற்றில் சந்தித்திருந்தனர், அப்படித்தான் ரவியையும் அவள் சந்தித்தாள். சந்தித்திருந்தாலும் இருவரும் பேசிக்கொண்டது இல்லை. எதேச்சையாக ரவியின் Bio-Data அவள் கண்ணில் பட்டது. ரவியும் அவளுடைய ஊரைச் சேர்ந்தவன் தான் என்பதைக் கண்டவுடன் ஏதோ ஒரு மகிழ்ச்சி அவள் மனத்தில். உடனே சென்று ரவியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். இருவருமே நேர்-காணலை சிறப்பாக செய்தனர். இறுதிச் சுற்று முடிந்து அன்றே offer letter தருவதாக சொன்னதால், இருவரும் மாலை வரை காத்திருக்க வேண்டியதாயிற்று.

சுஜி: ரவி, offer letter கிடைச்ச உடனே ஜாயின் பண்ணீடுவீங்களா ?
ரவி: இல்ல சுஜி, ஒரு 10 days டைம் கேப்பேன்
சுஜி: எதுக்கு ?
ரவி: என்னோட Dream Company ஒண்ணுல இன்னும் result சொல்லல, இன்னும் 1 வாரத்துல அதுக்கு result தெரிஞ்சிடும். அந்த offer வந்ததுன்னா, அதத்தான் choose பண்ணுவேன்.
சுஜி: ஓ! All the best
ரவி: Thanks. நீங்க இங்க தான் ஜாயின் பண்ணுவிங்களா ?
சுஜி: ஆமா ரவி, எனக்கு வேலை கிடைக்கிறதே பெரிய விஷயம்..offer வாங்கின அடுத்த நாளே ஜாயின் பண்ணிடுவேன்.
ரவி: ஹ்ம்ம்..
சுஜி: அடுத்து எப்ப ஊருக்குப் போறீங்க ?
ரவி: நம்ம் ஊரு பொங்கலுக்குப் போவேன். நீங்க ?
சுஜி: நானும் போகணும்..நீங்க டிக்கெட் போட்டுட்டீங்களா ?
ரவி: இல்ல, இனிமேல் தான்
சுஜி: நாம சேர்ந்து போலாமே, எனக்கும் சேர்த்து book பண்ணுறீங்களா? உங்களுக்கு ஒண்ணும் problem இல்லையே ?
ரவி: ம்..சரி no problem.

ரவி அவனின் கனவு நிறுவனத்தில் பணிபுரிய ஆரம்பித்தான், சுஜியுடனான அவனின் நட்பும் தொடர ஆரம்பித்தது. நீங்கள், நீ ஆனது. வார இறுதி சந்திப்பு மறைந்து, வாரம் முழுவதும் சந்திப்பு தொடர்ந்தது. வாழ்க்கைல புதுசா ஒரு உறவு வரும் போது எல்லாமே நல்லதாகவே நடக்கிற மாதிரி இருக்கும், மனசு எப்போதும் சந்தோஷமா இருக்கும். ரவியும் சுஜியும் அந்த பருவத்தில் தான் இருந்தனர். வாழ்க்கை மிகவும் இனிமையாக சென்றது.

ஆண்-பெண் நட்பில் சலனத்தின் பங்கு மிக முக்கியமானது. சலனம், அது இருவருக்குமே வராமல் இருக்கலாம் அல்லது இருவருக்குமே வரலாம், இந்த இரண்டிலும் அல்லது இந்த இரண்டினாலும் நட்புக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் இருவரில் ஒருவர்க்கு மட்டும் மற்றவர் மேல் நட்பையும் தாண்டி ஒரு சிறு சலனமோ, ஈர்ப்போ உருவாகிவிட்டால் அங்கே நட்போ காதலோ மறைய ஆரம்பித்து விடும்.



இந்த நிமிடம் வரை ரவிக்கும் சுஜிக்கும் இடையே ஒரு நல்ல நட்பு மட்டுமே இருந்து வருகிறது..இப்படியே இருந்திருந்தால், இந்தக் கதையை எழுத அவசியம் இருந்திருக்காது.. இந்த இருவரில் ஒருவர்க்கு மட்டும் அடுத்தவர் மேல் நட்பையும் தாண்டி ஒரு வித உணர்வு, மிக ரகசியமாய் வளர்கிறது.. யாருக்கு தோன்றியது ?? இவ்வளவு நாட்கள் தோன்றாத ஒரு விஷயம் இப்போது எப்படி தோன்றியது ?

தொடரும்...

பகுதி IV

Friday, June 01, 2007

நீ வருவாய் என - II

பகுதி I
சுஜாதா: ஏன் ரவி, என்னைய தெரியாத மாதிரியே தான் இருக்க போறியா ? என்னைய புரிஞ்சிக்கவே மாட்டியா ??
சுஜாதா: என்னைய மறந்துட்டில ரவி.

[ரவி அவள் கண்களை பார்த்து மெல்ல சிரித்தான்.

ஆம்
மறந்து தான் போய் விட்டேன்
உன் விழியில் இந்த உலகத்தை
மறந்து தான் போய் விட்டேன்
உன் நினைவில் என் தனிமையை
மறந்து தான் போய் விட்டேன்
உன்னை மறக்க வேண்டும் என்ற மனஉறுதியை

]

சுஜாதா: ஏன் ரவி ஒண்ணுமே பேச மாட்டேங்கற?
[அப்போது ஷீலா திரும்பி வருகிறாள்]
ஷீலா: என்ன ரவி பேச மாட்டேங்கறானா? அவன் எப்பவுமே அப்படி தான். நாங்க இங்க சேர்ந்த நாள்ல இருந்து இவன் என்கிட்ட பேசியதை எல்லாம், ஒரு Bus டிக்கெட் பின்னாடி எழுதிடலாம். ஆனா செம brilliant, நம்ம TL க்கு இவன் தான் வலக்கை. டேய், என்ன முறைக்கிற ?? 'அள்ளக்கை'ன்னா சொன்னேன், வலக்கைன்னு தான சொன்னேன்.
ரவி: எனக்கு இப்ப ஒரு con-call இருக்கு..நாம அப்புறம் பேசலாம்.
ஷீலா: சுஜி, மதியம் லஞ்ச் தனியா சாப்பிட்டு இருந்தீங்க போல?? உங்களுக்கு ஆட்சேபணை இல்லைனா, நாளைக்கு எங்களோட ஜாயின் பண்ணிக்கோக்கங்க.
சுஜி: தாங்க்ஸ் ஷீலா..கண்டிப்பா நாளைக்கு ஜாயின் பண்ணிக்கிறேன்.
(சில நாட்களுக்குப் பிறகு....)

ஷீலா: டேய், உண்மைய சொல்லு..உனக்கு சுஜிய, முன்னாடியே தெரியுமா ??
ரவி: தெரியாது ஏன் கேக்குற ?
ஷீலா: இல்ல இன்னைக்கி காலைல கோவிலுக்கு போயிருந்தேன். அப்போ அவ உன் பெயருக்கு அர்ச்சனை பண்ணினா. இன்னைக்கி உனக்கு பிறந்த நாள்ன்னு அவளுக்கு எப்படி தெரியும் ? நம்ம டீம்ல கூட என்னைய தவிர வேற யாருக்கும் தெரியாது.
ஞாபகம் இருக்கா? அன்னைக்கி உன்னோட PAN Card application fill பண்ணினப்போ தான் எனக்கே தெரியும், அப்போ நான் கேக்கும் போது தான் மற்ற details சொன்ன.
ரவி: ஊருக்குள்ள ஆயிரம் ரவி இருப்பாங்க.
ஷீலா: ஓ!!! அப்படீங்களா சார்...அப்புறம் அவளுக்கு எப்படி உன்னோட கோத்திரம்,நட்சத்திரம் எல்லாம் தெரியும் ? ஒரு வேளை, அவளுக்கு தெரிஞ்ச ரவிக்கும் உனக்கும் ஒரே நாள், ஒரே கோத்திரம், ஒரே நட்சத்திரமா இருக்கலாம் இல்லையா ? அதான் ஊருக்குள்ள ஆயிரம் ரவி இருக்காங்களே இல்லையா ரவி சார் ? அன்னைக்கு சாப்பிடும் போதும் பாத்தேன்...உன்னையவே பாத்துக்கிட்டு இருந்தா, கொஞ்ச நேரம் கழிச்சு, கண்ணை துடைச்சிக்கிட்டா..
ரவி: நீ உன் வேலைய பாக்க மாட்டியா? யார் என்ன பண்றாங்கன்ணு தான் பார்ப்பியா ? ஒரு வேளை அவளுக்கு கண்ல தூசு பட்டிருக்கும்.
ஷீலா: எனக்கு என்னமோ இன்னும் சந்தேகாமாவே தான் இருக்கு. சரி அதை விடு, என்னைய எங்க treat கூட்டிட்டு போற ?
ரவி: எங்க வேணும்னாலும் போகலாம், இப்ப நீ இங்க இருந்து போறியா ?
[ஷீலா செல்கிறாள், ரவியின் மனது அவனிடம் கேட்கும் கேள்விகளுக்கு அவனிடம் பதில்கள் இல்லை. சில தினங்களுக்கு முன்பு படித்த ஒரு கவிதை ஏனோ தேவை இல்லாமல், அவன் நினைவுக்கு வந்தது

என் பிறந்த நாளில்
நீ என் பெயரில் செய்த அர்ச்னையால்
எனக்கும் கடவுளுக்கும் சண்டை,
தினமும்
கடவுள் பெயரில் அர்ச்சனை செய்யும் நீ
இன்று என் பெயரில் செய்ததால்
கடவுளுக்கு என் மீது கோபம்
அவருடைய தேவதைகளில் ஒன்றை
நான் அபகரித்துவிட்டேன் என்று.



யாரோ வரும் சத்தம் கேட்டு அவன் நினைவுகள் கலைகின்றன.]

இடம்: Office Cafeteria
பாத்திரங்கள்: சுஜி, ஷீலா மற்றும் Bench மக்கள்
ஷீலா: உன்னைய இன்னைக்கி காலைல கோவில்ல பாத்தேன், சாமி கிட்ட ஏதோ application போட்டுக்கிட்டு இருந்த?
சுஜி: நான் தினமும் கோவிலுக்கு போவேன்
ஷீலா: ஓ! அப்படியா...சரி இந்த வீக்கெண்ட் ப்ளான் என்ன உனக்கு ?
சுஜி: பெருசா ஒண்ணும் இல்ல, சாப்பிட்டு சாப்பிட்டு தூங்க வேண்டியது தான் நீ என்ன பண்ண போற ?
ஷீலா: ரவியோட வெளில போகலாம்னு இருக்கேன்.
சுஜி: ஓ!, சரி ஷீலா, எனக்கு இப்போ ஒரு மீட்டிங் இருக்கு, நாம அப்புறம் மீட் பண்ணலாம்.

ரவி ஷீலாவை அழைத்துச் செல்கிறான் என்று கேட்டவுடன், ஏனோ சுஜியின் மனதில் ஒரு சிறிய வலி அவள் கண்கள் கலங்கின. ஏன் எங்கள் உறவில் இப்படி ஒரு விரிசல்? என்று அவள் மனம் யோசிக்க தொடங்கியது.
முதன் முதலில் ரவியை அவள் சந்தித்த அந்த பொழுது....

தொடரும்.....
பகுதி III

Thursday, May 31, 2007

நீ வருவாய் என - I

ஷீலா: என்ன கண்ணா, உன்னைய Blue cross members , ஆந்திரா சினிமா P.R.Os, எல்லாரும் தேடிகிட்டு இருக்காங்க, நீ silent-ஆ இங்க உக்காந்திருக்க ?
ரவி: என்னையவா?? எதுக்கு ??

ஷீலா: உன்னோட சட்டை கலர் பாத்து, 4 மாடுகளுக்கு கண்ணு தெரியலையாம், அதான் Blue cross members உன்மேல் case போட்றதுக்காக தேடிகிட்டு இருக்காங்க.
இந்த மாதிரி கலர் combinationல dress design பண்றதுக்கு, ஆந்திராவுல யாருமே இல்லையாம், அதான் Interview கூட வைக்காம உனக்கு offer தர்றதுக்காக எல்லாரும் வெளில waiting.
ஏண்டா இப்படி அடிக்கிற கலர்ல dress பண்ணுற, கொஞ்சம் pleasant-ஆ dress பண்ணலாம்ல ?
ரவி: எல்லாம் எங்களுக்கு தெரியும்..நீ போய் உன் வேலைய பாரு.
ஷீலா: உன்னைய எல்லாம்ம்ம், என்ன சொல்லுறதுன்னே தெரியல. எப்படியோ ஒழி.

(சில நாட்களுக்குப் பிறகு....)

ஷீலா: டேய், call பண்ணினா, attend பண்ண மாட்டியா ??
ரவி: எப்ப call பண்ணின? எனக்கு missed call கூட வரல
ஷீலா: உன் டப்பா 'செல்'ல தூக்கி சாம்பார்ல போடு. ஏண்டா நானும் எவ்வளவு நாளா சொல்றேன், வேற ஒரு நல்ல mobile வாங்குன்னு.
ரவி: ஏன் இந்த போனுக்கு என்ன ? அப்பப்ப switch-off ஆகிடும், அவ்வளவு தான். இது போதும் எனக்கு.
ஷீலா: உனக்கு போதும்டா. நீயா உனக்கு call பண்ண போற ? நாங்க தான பண்ணனும்.
ரவி: நான் உன்னைய call பண்ண சொன்னேனா ?
ஷீலா: ஏண்டா இப்படி இருக்க ? நல்லா dress பண்ண மாட்டேங்கற, நல்ல phone வாங்க மாட்டேங்கற...எப்பவுமே இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே மூஞ்சிய வச்சிருக்க ? என்னாச்சு ?
ரவி: இப்ப உனக்கு என்ன வேணும் ? வேலை இல்லைனா வீட்டுக்கு போ....ஏன் சும்மா வந்து என்னைய torture பண்ணுற ??
ஷீலா: ஹ்ம்ம்..எல்லாம் நேரக் கொடுமை. நான் போறேன்..நீ இந்த laptop-ஆ கட்டி அழு..bye.

[காலசக்கரத்தில் கொஞ்சம் பின்னோக்கி சென்று பார்க்கலாம்....ரவியும், ஷீலாவும், அந்த MNC வாயிலில் ஒரே நாள் கால் பதித்தவர்கள். இயல்பில் ரவி தனிமை விரும்பி...ஷீலா அவனுக்கு நேர்-எதிர். அவளுக்கு எப்போதும், அவளை சுற்றி நண்பர்கள் வேண்டும் குணத்தில் இரு துருவங்களாக இருந்த போதிலும், எப்படியோ இருவரும் நண்பர்களாகி விட்டனர் இல்லை, ஷீலா அவனை நண்பனாக்கி கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.]

ஷீலா: ரவி, நம்ம டீம்ல புதுசா ஜாயின் பண்ணி இருக்குற பொண்ணு பாத்தியா ?
ரவி: இல்லை.
ஷீலா: நம்ம சர்மாவும், செந்திலும், ஒண்ணு அவ பக்கத்துல இருக்காங்க, இல்ல அவ இருக்குற பக்கம் பாத்துக்கிட்டு இருக்காங்க.
ரவி: சரி
ஷீலா: [கோபத்துடன்] உன்கிட்ட சொன்னததுக்கு, அந்த சுவத்துக்கிட்ட சொல்லிருக்கலாம்..ஹும்ம்.. ஏன் ரவி, நீ யாரையாவது லவ் பண்ணிருக்கியா ??
ரவி: இப்ப நீ இங்க இருந்து போறியா ?
[அப்போது அந்த புதுப் பெண் வருகிறாள்]
ஷீலா: ஹாய்...நான் ஷீலா, இது ரவி
ரவி: ஹாய்.
xyz: ஹாய்...என் பேரு சுஜாதா...நேத்து தான் ஜாயின் பண்ணினேன். Induction இருந்ததுனால நேத்து பேச முடியல.
ஷீலா: அதனால என்ன இனிமேல் இங்க தான இருக்க போறோம், பேசிக்கிட்டே இருக்கலாம்.
[அப்போது ஷீலாவின் கைபேசி அழைக்கிறது..அவள் வெளியே செல்கிறாள்.]

சுஜாதா: ஏன் ரவி, என்னைய தெரியாத மாதிரியே தான் இருக்க போறியா ? என்னைய புரிஞ்சிக்கவே மாட்டியா ??

தொடரும்...

பகுதி II