Thursday, May 31, 2007

நீ வருவாய் என - I

ஷீலா: என்ன கண்ணா, உன்னைய Blue cross members , ஆந்திரா சினிமா P.R.Os, எல்லாரும் தேடிகிட்டு இருக்காங்க, நீ silent-ஆ இங்க உக்காந்திருக்க ?
ரவி: என்னையவா?? எதுக்கு ??

ஷீலா: உன்னோட சட்டை கலர் பாத்து, 4 மாடுகளுக்கு கண்ணு தெரியலையாம், அதான் Blue cross members உன்மேல் case போட்றதுக்காக தேடிகிட்டு இருக்காங்க.
இந்த மாதிரி கலர் combinationல dress design பண்றதுக்கு, ஆந்திராவுல யாருமே இல்லையாம், அதான் Interview கூட வைக்காம உனக்கு offer தர்றதுக்காக எல்லாரும் வெளில waiting.
ஏண்டா இப்படி அடிக்கிற கலர்ல dress பண்ணுற, கொஞ்சம் pleasant-ஆ dress பண்ணலாம்ல ?
ரவி: எல்லாம் எங்களுக்கு தெரியும்..நீ போய் உன் வேலைய பாரு.
ஷீலா: உன்னைய எல்லாம்ம்ம், என்ன சொல்லுறதுன்னே தெரியல. எப்படியோ ஒழி.

(சில நாட்களுக்குப் பிறகு....)

ஷீலா: டேய், call பண்ணினா, attend பண்ண மாட்டியா ??
ரவி: எப்ப call பண்ணின? எனக்கு missed call கூட வரல
ஷீலா: உன் டப்பா 'செல்'ல தூக்கி சாம்பார்ல போடு. ஏண்டா நானும் எவ்வளவு நாளா சொல்றேன், வேற ஒரு நல்ல mobile வாங்குன்னு.
ரவி: ஏன் இந்த போனுக்கு என்ன ? அப்பப்ப switch-off ஆகிடும், அவ்வளவு தான். இது போதும் எனக்கு.
ஷீலா: உனக்கு போதும்டா. நீயா உனக்கு call பண்ண போற ? நாங்க தான பண்ணனும்.
ரவி: நான் உன்னைய call பண்ண சொன்னேனா ?
ஷீலா: ஏண்டா இப்படி இருக்க ? நல்லா dress பண்ண மாட்டேங்கற, நல்ல phone வாங்க மாட்டேங்கற...எப்பவுமே இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே மூஞ்சிய வச்சிருக்க ? என்னாச்சு ?
ரவி: இப்ப உனக்கு என்ன வேணும் ? வேலை இல்லைனா வீட்டுக்கு போ....ஏன் சும்மா வந்து என்னைய torture பண்ணுற ??
ஷீலா: ஹ்ம்ம்..எல்லாம் நேரக் கொடுமை. நான் போறேன்..நீ இந்த laptop-ஆ கட்டி அழு..bye.

[காலசக்கரத்தில் கொஞ்சம் பின்னோக்கி சென்று பார்க்கலாம்....ரவியும், ஷீலாவும், அந்த MNC வாயிலில் ஒரே நாள் கால் பதித்தவர்கள். இயல்பில் ரவி தனிமை விரும்பி...ஷீலா அவனுக்கு நேர்-எதிர். அவளுக்கு எப்போதும், அவளை சுற்றி நண்பர்கள் வேண்டும் குணத்தில் இரு துருவங்களாக இருந்த போதிலும், எப்படியோ இருவரும் நண்பர்களாகி விட்டனர் இல்லை, ஷீலா அவனை நண்பனாக்கி கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.]

ஷீலா: ரவி, நம்ம டீம்ல புதுசா ஜாயின் பண்ணி இருக்குற பொண்ணு பாத்தியா ?
ரவி: இல்லை.
ஷீலா: நம்ம சர்மாவும், செந்திலும், ஒண்ணு அவ பக்கத்துல இருக்காங்க, இல்ல அவ இருக்குற பக்கம் பாத்துக்கிட்டு இருக்காங்க.
ரவி: சரி
ஷீலா: [கோபத்துடன்] உன்கிட்ட சொன்னததுக்கு, அந்த சுவத்துக்கிட்ட சொல்லிருக்கலாம்..ஹும்ம்.. ஏன் ரவி, நீ யாரையாவது லவ் பண்ணிருக்கியா ??
ரவி: இப்ப நீ இங்க இருந்து போறியா ?
[அப்போது அந்த புதுப் பெண் வருகிறாள்]
ஷீலா: ஹாய்...நான் ஷீலா, இது ரவி
ரவி: ஹாய்.
xyz: ஹாய்...என் பேரு சுஜாதா...நேத்து தான் ஜாயின் பண்ணினேன். Induction இருந்ததுனால நேத்து பேச முடியல.
ஷீலா: அதனால என்ன இனிமேல் இங்க தான இருக்க போறோம், பேசிக்கிட்டே இருக்கலாம்.
[அப்போது ஷீலாவின் கைபேசி அழைக்கிறது..அவள் வெளியே செல்கிறாள்.]

சுஜாதா: ஏன் ரவி, என்னைய தெரியாத மாதிரியே தான் இருக்க போறியா ? என்னைய புரிஞ்சிக்கவே மாட்டியா ??

தொடரும்...

பகுதி II

Sunday, May 27, 2007

Love

Everything I've done, I've done
Only for your love.
Everything I am, I am
In hopes your heart will move.

I know that you love someone else,
But while you're away,
I'll love you just as though our love
Would last till you are grey.

Till you and I are grey, my love,
And all our days are done,
I'll love you just as I do now;
Your heart's my only home.

Monday, May 21, 2007

தண்ணீர் !!! தண்ணீர் !!!

இந்த போஸ்ட் நம்ம ஊரு தண்ணீர் பஞ்சம் பத்தி இல்லைங்க. அறியாத வயசுல அனுபவிச்ச ஒரு ஆனந்த இம்சை...அப்போ அது இம்சையா இருந்தது, இப்போ நினைச்சு பாத்தா சிரிப்பா வருது.

அப்போ நாங்க 11th படிச்சிட்டு இருந்தோம், எங்க class-ல ரொம்ப பேரு மதிய சாப்பாடு, கொண்டு வந்திருவாங்க, சில பேரு lunch time-ல வீட்டுக்கு போய் சாப்பிட்டு வருவாங்க. அப்படி சாப்பாடு கொண்டு வர்ற சில பேரோட தண்ணீர் bottle-ல அவங்களுக்கு தெரியாமல் எடுத்து வச்சுக்குவோம். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், அந்த தண்ணீர் bottle பையன்கிட்ட போய் ஒருத்தன் உட்காருவான், கொஞ்ச நேரம் அவனோட ஏதாவது பேசிட்டே இருப்பான், அப்புறம் ஒரு 2 or 3 mins-ல திரும்பி வந்திருவான்.

இவன் திரும்பி வந்த உடனே அந்த தண்ணீர் bottle பையன், திடீர்னு எழுந்திரிப்பான், பக்கத்துல வந்து பேசிட்டு போன அவன கொலை வெறியோடு பார்ப்பான், வேகமா வெளில போய் நல்ல வெயில் அடிக்கிற இடமா பாத்து உட்காருவான் ஒரு 5 நிமிஷம் கழிச்சு உள்ள வந்து,பக்கத்துல வந்து பேசிட்டு போன பையனோட சண்டைய போடுவான்.

விஷயம் என்னன்னா, இந்த பசங்க அவனோட தண்ணீர் bottle-ல இருந்து கொஞ்சம் தண்ணிய அந்த bottle மூடில எடுத்துட்டு போய், அவனோட back-ல ஊத்திட்டு வந்திருவான், கொஞ்ச நேரத்துல அவனோட pant back-ல ஒரு பெரிய water-mark[;)]- இருக்கும். அவன் வேகமா வெளில போய், அத வெயில்ல காய வச்சுட்டு வருவாங்க, especially, நல்ல வெயில் அடிக்கிற சிமெண்ட் தரைல போய் ஒரு 3 நிமிஷம் உட்காந்திட்டு வருவான்.இதுக்கு அப்புறம், எங்க எப்ப, யார் பக்கத்துல வந்தாலும், எல்லாரும் முதல்ல அவன் கைல water bottle மூடி இருக்கான்னு தான் பார்ப்பாங்க. நம்ம பசங்க அதுக்கும் ஒரு வழி கண்டுபிடிச்சாங்க.

ஒரு சின்ன ப்ளாஸ்டிக் tube, இந்த வீட்டில எலெக்ட்டிரிக் wire எல்லாம் ஒரு வெள்ளை கலர் tube வழியா connect பண்ணுவாங்கல்ல..அந்த tube-அ, எடுத்துட்டு வந்துடாங்க. இப்ப எப்படின்னா, யார் back-ல தண்ணீ ஊற்றணுமோ, அவனுக்கு பின்னாடி இருக்குற பெஞ்சில போய் உக்காந்துக்கிட்டு, அந்த சின்ன tube-அ, அவனுக்கு பின்னாடி அவன் மேல படாம, அவனோட பெஞ்சில வச்சு, அந்த tube-க்குள்ள, தண்ணீ ஊத்திருவாங்க, again the result will be same, திரும்பவும் அவன் சிமெண்ட் தரையை தேடி ஓடுவான்.

ஹ்ம்ம், அது ஒரு அழகிய நிலா காலம்.

Tuesday, May 15, 2007

என் சோக கதையை கேளு Blog குலமே

இந்திய மண்ணுல கால் வச்சதும், அப்படியே மெய் சிலிர்த்து போச்சி ( டேய், போதும் அடங்குன்னு நீங்க சொல்றது கேக்குது), matter என்னன்னா, Onsite-ல இருந்து வந்தா, உனக்கு ஒரு 2 மாசத்துக்கு ஆணி கிடையாது. ஏன்னா off-shore-ல எல்லாருமே வெட்டியா தான் இருக்கோம், அப்படின்னு எங்க offshore நண்பர்கள் சொன்னத நம்பி, நானும் சந்தோஷமா வந்தேன்.

நண்பர்கள் சொன்ன மாதிரியே, வந்ததும் ஆபீசில ஒரு வேலையும் இல்ல. இந்த 4.5 வருட Software Engineer வாழ்க்கைல முதல் முறையாக, BENCH ல இருந்தேன், ஆகா!!! என்ன சுகம் ! என்ன சுகம்!.. சரி இப்படி Bench ல இருக்கும் போதே, நம்முடைய சின்ன சின்ன ஆசை எல்லாம் நிறைவேற்றிடலாம், அப்படின்னு, முதல் வேலையா, போய் ஒரு Basket Ball, வாங்கிட்டு வந்தேன். Daily காலைல நானும் என்னோட room-mate-um, எங்க வீட்டு பக்கத்துல இருக்குற ஒரு Basket-Ball court-ல போய் விளையாடலாம்ன்ணு ப்ளான் போட்டோம். அடுத்த நாள் காலைல 6:30 மணிக்கு போய் வெற்றிகரமா எங்களோட practice-a ஆரம்பிச்சோம். ஒரு 7:15 வரைக்கும் விளையாடி களைச்சு, வீட்டுக்கு போறப்போ, ரொம்ப சந்தோஷமா இருந்தது.

அதே சந்தோஷத்தோட, office போனேன். வழக்கம் போல lunch வரைக்கும் ஜாலியா gmail,cricinfo, அப்படின்னு சுத்திக்கிட்டு இருந்தேன். திடீர்னு எங்க தலைவர் கூப்பிட்டு, ஒரு phone-call attend பண்ண சொன்னாரு..யாரோ technical-அ, என்ன என்னமோ கேட்டாங்க, நானும் சும்மா ஜாலியா பதில் சொன்னேன். சாயங்காலம் எங்க தலை என்னய கூப்பிட்டு, உனக்கு ஒரு 2 மாசத்துக்கு Gurgaon ல வேலை இருக்கு, நீ அங்க போ ராசா ன்னு, சொன்னாரு. எனக்கு ஒரே ஷாக்!!! என் கனவு எல்லாம், ஒரு நிமிஷத்துல அப்படியே கலான்சு போச்சு :(. எப்படியோ அவரை சமாளிச்சு, ஒரு நாலு நாள், எங்க ஊருக்கு போய், திருவிழா பாத்துட்டு, exhibition போய்ட்டு[I will put a separate post on my trip to Sivakasi].

ஊர விட்டு வர மனசே இல்லாம, மதுரைல இருந்து Delhi-க்கு வந்தேன். இன்னும் 2 மாசத்துக்கு இங்க தான் குப்பை கொட்ட போறேன் :(. இப்படியாக நான் ஒரு Michael Jordan ஆக உருவாகுவதை இந்த சமுதாயம் தடுத்து என் கனவுக் கோட்டையை இடித்து விட்டது :(

காதல் மலர்


நீ என்னை காதலிக்கலாம்,
என்னால் உன்னை காதலிக்க முடியாது
என்றாய்.

கண்மணியே,
மலரும் எல்லா மலருமே
வண்டிற்காக தான் காத்திருக்கிறது

ஆனால்,
எல்லா மலருக்கும்
வண்டின் ஸ்பரிசம் கிடைப்பதில்லை

அதற்காக,
மலர்கள் வாடுவதில்லை,
இறுதி வரை வண்டிற்காகவே வாழ்ந்து மறைகிறது.

என் காதலும், ஒரு மலர் தான்
வண்டாக நீ வந்தாலும் இல்லையென்றாலும்,
என் காதல் மலர் இறுதி வரை
உனக்காகவே தான் மலர்ந்து,
மணம் வீசிகொண்டிருக்கும்.