Thursday, November 04, 2010

ஓரு துளி இரத்தம் - 2

மிஷனர் அலுவலகம்.. கமிஷனர் ராஜகோபால்..

“என்ன மிஸ்டர் விக்ரம்.. அந்த பாடியோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் என்ன சொல்லுது?”

“சார்.. Cause of death வந்து கழுத்து எலும்பு முறிஞ்சிருக்கு. Approximate’ஆ 36 hours’க்கு முன்னாடி கொலை நடந்திருக்கணும். அந்த பாடியோட நெத்தியில் இருந்த ரத்தமும், அந்த பேப்பரில் இருந்த ரத்தமும் B Positive. இறந்தவரோட ரத்தம் O Positive"

"இறந்தவரைப் பத்தி எதாவது details தெரிஞ்சுதா?”

“இல்லை சார்.. பாடியோட shirt பாக்கெட்’ல இருந்த லெட்டரைத் தவிர வேற எந்தப் பொருளும் இல்லை.
சென்னையில் உள்ள எல்லா ஸ்டேஷனுக்கும் ஃபோட்டோ அனுப்பியிருக்கேன். Person missing complaints, Criminal records எல்லாத்துலயும் search பண்ண சொல்லிருக்கேன்”

“அப்படியே நியூஸ் பேப்பர்லயும் ஒரு Ad கொடுத்துடுங்க”

“ஓகே சார்”

விக்ரமின் செல்ஃபோன் அலறியது.

“சார், நான் பெசன்ட் நகர் இன்ஸ்பெக்டர் ரவி பேசறேன்”

“சொல்லுங்க ரவி”

“சார், இங்க பெசன்ட் நகர் பீச்ல ஒரு பாடி கிடக்கு. Last week மெரினா’ல கிடைச்ச பாடி மாதிரியே நெத்தியில ஒரு துளி ரத்தம் உறைஞ்சிருக்கு”

“சரி, நான் இப்போ உடனே ஸ்பாட்டுக்கு வர்றேன்” என்று சொல்லியபடி செல்ஃபோனை அணைத்தான் விக்ரம்.

“என்ன விக்ரம், என்னாச்சு?”

“சார்.. பெசன்ட் நகர் பீச்ல அதே மாதிரி ஒரு பாடி கிடக்காம்.. இன்ஸ்பெக்டர் பேசினார்”

“ஓ.. எவனோ ஒரு பைத்தியக்காரன் நம்மளைத் தூங்கவிடக் கூடாதுன்னு கிளம்பியிருக்கான்னு நினைக்கிறேன். Last week murder ஆன அந்த ஆளோட ஃபோட்டோவைத் தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஸ்டேஷனுக்கும் அனுப்பச் சொல்லுங்க. சரி, நீங்க உடனே ஸ்பாட்டுக்கு கிளம்புங்க”

==============================================================

பெசன்ட் நகர் பீச்..

“ரவி, பாடியோட shirt / pant பாக்கெட்ல எதாவது இருந்துதா?”

“அப்படி எதுவும் இல்லை சார். ஆனா, கையில் ஒரு வாட்ச் மட்டும் கட்டியிருக்கு. அதுவும் ஓடலை”

“வாட்ச்’ல என்ன டைம் இருக்கு?”

“ரெண்டு மணி சார்”

விக்ரமின் செல்ஃபோன் அலறியது.

“சார், கண்ட்ரோல் ரூம்லருந்து பேசுறோம்.. ஓல்ட் மகாபலிபுரம் ரோட்ல இருக்குற Blue Heaven பீச் ரிசார்ட்ல ஒரு மர்டர். போன வாரம் மெரினால நடந்த மர்டர் மாதிரியே அந்த பாடியிலயும் நெத்தியில ஒரு துளி ரத்தம் இருக்குறதா தகவல் வந்திருக்கு சார்”

“ஓகே, நான் ஸ்பாட்டுக்குப் போறேன், அந்த ஏரியா இன்ஸ்பெக்டரை என்னை contact பண்ணச் சொல்லுங்க”

“சரி சார்.. சொல்லிடறேன்”

ஃபோனை அணைத்தபடியே,

“ரவி, same mode’ல இன்னொரு மர்டர்”

“எங்க சார்?”

“Blue Heaven பீச் ரிசார்ட், ஓல்ட் மகாபலிபுரம் ரோட்.. சரி, நீங்க பாடியை போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பிட்டு, ரிப்போர்ட் வந்ததும் என்னை contact பண்ணுங்க”

“ஓகே சார்”

விக்ரம் Blue Heaven ரிசார்டிற்கு வண்டியைச் செலுத்தினான். திரும்பவும் செல்ஃபோன் கூப்பிட்டது.

“சார், நான் இன்ஸ்பெக்டர் மாணிக்கவேல். Blue Heaven ரிசார்ட்லருந்து பேசறேன்”

“சொல்லுங்க மாணிக்கவேல், scene of crime என்னது?”

“சார்.. இறந்தவர் பேர் பிரவீன். பெங்களூரில் இருந்து வந்து இந்த ரிசார்ட்டில் ரெண்டு நாளா தங்கியிருக்காரு. எப்போ பீச்சுக்குப் போனாருன்னு தெரியல. காலையில ரிசார்ட்ல தங்கியிருந்தவங்க சில பேர் பீச்சுக்குப் போறப்ப பாடியைப் பார்த்து ரிசார்ட்ல இன்ஃபார்ம் பண்ணிருக்காங்க. பாடியில் எங்கயும் காயம் எதுவுமில்ல. நெத்தியில் மட்டும் ஒரு drop ரத்தம் உறைஞ்சிருக்கு”

“Shirt, pant பாக்கெட்ல எதுவுமில்லையா?”

“இல்ல சார்”

“எதாவது ornaments?"

"வாட்ச் மட்டும் கட்டிருக்காரு. அதுவும் ஓடலை”

“அந்த வாட்ச்ல என்ன டைம் காட்டுது?”





...தொடரும்


[Note: Thanks to my wife, for helping me in typing these Tamil fonts and for immediate feedbacks and corrections]

Wednesday, October 27, 2010

ஓரு துளி இரத்தம் - 1

காலைச் சூரியன் உதயமாகும் நேரம், கடற்கரையில் வாசனும் கீர்த்தியும் உடல் இளைக்க வேண்டி ஒடிக் கொண்டிருந்தனர்.

”என்னங்க, இவ்வளவு மெதுவா ஒடினா எப்படி உங்க தொப்பை குறையும்? நல்லா வேகமா ஓடி வாங்க..”

கீர்த்தி திரும்பிப் பார்த்துச் சொல்லிக் கொண்டே, காலில் ஏதோ இடற மணலில் விழுந்தாள்.

“என்னாச்சு கீர்த்தி?” கேட்டுக் கொண்டே, வாசன் அவள் அருகில் சென்றான்.

கீர்த்தியின் பார்வை எங்கோ வெறித்தபடி இருந்தது.. அங்கே ஒரு உடல் மல்லாந்து கிடந்தது.

அதன் நெற்றியில் ஓரு துளி இரத்தம் உறைந்து கறுத்து இருந்தது.

======================================================

ட்ரிங் ட்ரிங்..

”Hello, Police Control room”

”சார், நான் Marina beach’ல இருந்து பேசுறேன், இங்க ஒரு dead body கிடக்கு”

“நீங்க யாரு? உங்க பேர் என்ன?”

“என் பேர் வாசன். நான் ஒரு டாக்டர், Triplicane’ல clinic வச்சிருக்கேன்”

“Dead body ஆம்பளையா? பொம்பளையா?”

“ஆம்பளைதான் சார். பார்க்க 25-30 வயசுப் பையன் மாதிரி இருக்கான்”

“ஓகே டாக்டர். நீங்க அங்கயே இருங்க. இன்னும் 5 minutes’ல patrol உங்களை contact பண்ணுவாங்க. நீங்க அவங்களுக்கு land mark சொல்லுங்க. உங்க mobile number 98x xxx xxxx, இதுதானா?”

“ஆமா சார், சரிதான்”

”இன்னும் 5 minutes’ல patrol உங்களை contact பண்ணுவாங்க”

“ஓகே சார், நான் wait பண்றேன்”

“என்னங்க.. உங்களுக்கு இது தேவையா? இப்போ அவங்க வர்ற வரைக்கும் wait பண்ணனும், அவங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லணும், அப்புறம் விசாரணை, கோர்ட், கேஸுன்னு அலையணும்”

“இல்லை கீர்த்தி. Body almost decomposed. So, எவ்வளவு வேகமா postmortem பண்றாங்களோ அவ்வளவு better'ஆ results கிடைக்கும்”

“என்னமோ போங்க. இன்னைக்கு முழிச்ச முகமே சரியில்ல”

கீர்த்தி சொல்லிக்கொண்டிருக்கும்போதே வாசனின் அலைபேசி அழைத்தது.

“ஹலோ.. நான் இன்ஸ்பெக்டர் விக்ரம் பேசுறேன். டாக்டர் வாசன்?”

“ஆமா இன்ஸ்பெக்டர்”

“நீங்க exact’ஆ எங்க இருக்கீங்க?”

“உழைப்பாளர் சிலைக்குக் கொஞ்ச தூரம் பின்னால, blue track suit, yellow T-shirt போட்டிருக்கேன்”

வாசன் பேசிக்கொண்டிருக்கும்போதே போலீஸ் ஜீப் உழைப்பாளர் சிலை அருகே வந்து நின்றது. ஜீப்பிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் விக்ரம் ’ஒரு கைதியின் டைரி’ கமல்ஹாசன் சாயலில் இருந்தான்.

“தேங்க்ஸ் டாக்டர். Body’ய எப்போ பார்த்தீங்க?”

“நானும் என் மனைவியும் தினமும் காலையில jogging வருவோம். இன்னைக்கும் அதே மாதிரி வந்தப்போதான் ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடிதான் பார்த்தோம்”

”நீங்க பார்க்கும்போது இந்தப் பக்கத்துல சந்தேகப்படுற மாதிரி யாராவது இருந்தாங்களா? இல்லை, ஏதாவது ஒரு வண்டி ரொம்ப வேகமா cross பண்ணுச்சா?”

“அப்படி எதுவும் இல்லை. ஆனா, as a doctor, இந்த பாடியைப் பார்த்தவுடனே எனக்குத் தெரிஞ்சது அந்த நெத்தியில இருக்குற ரத்தம் அந்த பாடிக்கு மேலே யாரோ வச்ச மாதிரி இருக்கு”

“ஓகே டாக்டர், தேங்க்ஸ். வேற எதாவது தேவைன்னா நாங்க உங்களுக்குக் கால் பண்றோம். நீங்க போகலாம். இதை இனிமேல் நாங்க பாத்துக்குறோம். நீங்க உங்க அட்ரெஸ் மட்டும் குடுத்துட்டுப் போங்க”

“ஷ்யூர் இன்ஸ்பெக்டர். இதுதான் என்னோட card. Contact me anytime”

“Thanks for your co-operation, doctor”

“No problem இன்ஸ்பெக்டர், நாங்க கிளம்புறோம்”

“ஓகே டாக்டர்”

”மணிகண்டன், ambulance’க்கு phone பண்ணியாச்சா?”

“On the way, sir..”

“மணிகண்டன், பாடியோட shirt பாக்கெட்’ல ஏதோ paper மாதிரி தெரியுது. என்னன்னு பாருங்க”

“சார்.. ஏதோ ரத்தத்துல எழுதிருக்கு சார்”

விக்ரம் அதை பார்த்தான், அதில்




...தொடரும்

[Note: Thanks to my wife, for helping me in typing these Tamil fonts and for immediate feedbacks and corrections]

Tuesday, August 03, 2010

Dum Dum Dum

Hi,
I'm going to get married on Aug 20 in Coimbatore. Please treat this as personal invitation and come and grace the occassion.

Looking forward to seeing you,

Wedding:
Ayyappan Pooja Sangam - Main Hall, Sathyamurthy Road, Gandhi Puram, Coimbatore.
20-August-2010, 7:30-9:00 am.

Reception:
Kaka Shanmuga Nadar Thangamani Ammal Kalyana Mandapam, Sivakasi.
21-August-2010, from 6:30 pm onwards

With Best Wishes,
Guna.